|
குடிபோதையில் அதிர்ச்சிப் படுகொலையில் முடிந்த வாக்குவாதம்! |
|
ஹொரண ரத்மல்கொடவில் அமையப் பெற்று உள்ள மாவக் ஓயா விருந்தினர் விடுதியில் நேற்று அதிர்ச்சிப் படுகொலை ஒன்று இடம்பெற்று உள்ளது. இவ்விருந்தினர் விடுதிக்கு உணவு உண்கின்றமைக்கும், மதுபானம் குடிக்கின்றமைக்கும் ஏராளமானவர்கள் நாளாந்தம் வருவார்கள். இவ்விதம் ஏழு பேர் கொண்ட குழுவினர் ஒன்றாக வந்து, மது அருந்தி, உணவு சாப்பிட்டார்கள். இவர்களூக்கு போதை தலைக்கேறி விட்டது.
சீரியஸாக வாக்குவாதப்பட்டு சண்டையிட்டனர். வேறு பல விருந்தினர்களும் வந்திருக்கின்றனர், எனவே வாக்குவாதம், சண்டை ஆகியவற்றை தயவு செய்து நிறுத்துங்கள் என்று விடுதி ஊழியர்கள் இவர்களிடம் பவ்வியமாக கேட்டனர். ஏழு பேரில் ஒருவர் வெளியில் வந்து சொந்த வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டார். ஏனைய ஆறு பேரையும் முழங்காலில் இருக்க சொன்னார். ஒவ்வொருவருடைய தலையையும் தனித் தனியாக குறி பார்த்துக் கொண்டு சென்றார். இவர்களில் ஒருவருடன் இவருக்கு முன்விரோதம் இருந்திருக்கின்றது. முன்விரோதக்காரரின் தலைக்கு நேராக குறி பார்த்தபோது ஆ... நீரும் இங்கு சாப்பீட வந்தீரா? என்று வினவினார். துப்பாக்கியை இயக்கினார். சன்னம் முன்விரோதக்காரரின் தலையை பதம் பார்த்தது. முன்விரோதக்காரர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். எங்கும் இரத்தம் நிறைந்து காணப்பட்டது.
முழங்காலில் இருந்த ஏனையவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். கொலையாளியும் சொந்த வாகனத்தில் தப்பியோடி மறைந்து விட்டார். ஹொரணவை சேர்ந்த ஒரு வர்த்தகரே சுட்டுக் கொல்லப்பட்டவர். இவ்வர்த்தகர் இரு குழந்தைகளின் தந்தை ஆவார். இப்படுகொலை தொடர்பாக இங்கிரிய பொலிஸ் நிலைய பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.
| |
மேலதிக செய்திகள் |
|
| கண்டி தலதா மாளிகை முன்பாக பிக்கு தீக்குளிப்பு!-(படங்கள் இணைப்பு) [Updated On-2013-05-24 06:10:44] | |
| தேசிய அரசாங்கம் அமைக்குக! பேராசான் சிற்றம்பலம் பேட்டி-(வீடியோ இணைப்பு) [Updated On-2013-05-24 03:03:26] | |
| தேங்காய்ப் பூவும் பிட்டும் போல தேவாவுடன் சுரேஸ் ஒட்டு!-(படங்கள் இணைப்பு) [Updated On-2013-05-24 02:01:19] | |
| தமிழ் யுத்த விதவைக்கு ஆஸியில் புகலிடம்!- [Updated On-2013-05-23 23:30:08] | |
| கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ!- [Updated On-2013-05-23 23:15:34] | |
| பஸ்ஸில் பாலியல் சேஷ்டை, கோப்ரல் விளக்கமறியலில்!- [Updated On-2013-05-23 14:13:55] | |
| பொன்னம்பலத்தின் நிதி பலம் என்ன? புலனாய்வு விசாரணை!- [Updated On-2013-05-23 05:37:36] | |
| யாழ்ப்பாண ராணி நகர ஊர்வலம்!-(படங்கள் இணைப்பு) [Updated On-2013-05-22 21:50:17] | |
| டக்ளஸ் தேவானந்தாவின் மாறாத துயரம்!- [Updated On-2013-05-22 20:51:40] | |
| தமிழ் கூட்டமைப்பு எம். பிகளுக்கு அவசியம் புனர்வாழ்வு!-(படங்கள் இணைப்பு) [Updated On-2013-05-22 20:25:51] | |














